Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Saturday, 28 June 2014

உமாபதி சிவம் அருளிய திருவருட்பயன்


உமாபதி சிவம்
அருளிய

திருவருட்பயன்


நூல் குறிப்பு :-

     நூலாசிரியர்          :  உமாபதி சிவம்

     பக்கங்கள்              :  224

     விலை                    : ரூபாய் 120/- (Rs. one twenty only only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.



உரைமுகம்:-
         திருவருட்பயன் என்னும் இந்நூல் மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் எட்டாவது நூலாக இடம் பெற்றுள்ளது. திருவருளினது பயனை உணா்த்தும் நூல் என்பது இதன் பொருள். எனவே திருவருள் என்பது யாது? அதன் பயன் யாது? அப்பயனைப் பெறுபவா் யார்? அப்பயனை ஏன் பெறுதல் வேண்டும்? அப்பயன் எப்போது கிடைக்கும்? எவ்வாறு கிடைக்கும்? அப்பயனைப் பெற்றவா் எவ்வாறு இருப்பா்? எவ்வாறு இருத்தல் வேண்டும்? கிடைத்த பயன் நிலைத்திருக்குமா? நீங்குமா? நீங்கும் எனில் நீங்காது இருப்பதற்கு என்ன செய்தல் வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எழும். அக்கேள்விகளுக்கெல்லாம் விடைகள் இந்நூலுள் உள்ளன.

நூலாசிரியா்:-
         இந்நூலை அருளியவா் உமாபதிசிவம் ஆவார்.

நூலமைப்பு:-
         இந்நூல் பதிமுதுநிலை முதலாக அணைந்தோர் தன்மை ஈறாகப் பத்து அதிகாரங்களை உடையது. இவற்றின் வேறாக நூலின் தொடக்கத்தில் ஆனைமுகத்தோன் வணக்கமாக ஒரு குறள் அமைந்துள்ளது. ஒவ்வோரதிகாரமும் பத்துப்பத்துக் குறள் வெண்பாக்களை உடையது. இவ்வகையில் இந்நூல் திருவள்ளுவநாயனார் அருளிய திருக்குறள் என்னும் நூலைப்போல் அமைந்துள்ளது. திருவள்ளுவா் அறம், பொருள், இன்பம் என்னும் மும்முதற் பொருளையும் வெளிப்படையாக உணா்த்தி, வீட்டு நெறியை நுனித்துணருமாறு வெளிப்படையாகத் தனிப்பாலில் கூறாது போயினார். இவ்வாசிரியா் அதனைத் தனியே எடுத்து ஒரு நூலாக ஆக்கி விளக்கமாக உணா்த்திச் சென்றார்.

இந்நூலின் இன்றியமையாமை:-
         உமாபதிசிவம் அருளிய சிவப்பிரகாசம் என்னும் நூலினை உணா்ந்து 

கொள்வதற்கு இந்நூல் இன்றியமையாதது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.