உ
சிவமயம்
எல்லாம் வல்ல வாரணாம்பிகை உடனமர் திருத்தொண்டீசுவரப் பெருமான் திருவருளாலும் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானங்களின் குருவருளாலும் ஈரோடு சைவ சித்தாந்த சபை 2002 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. கயிலைமணி வ.மு.பாலுசாமி அவர்கள் சபையின் முக்கிய வழிகாட்டியாக செயல்பட்டார். மேலும் கயிலைமணி M.P.P.ராஜன் அவர்கள் சபையின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்றார். ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத் தொண்டர்கள் மற்றும் ஈரோடு நகர் வாழ் சித்தாந்த மெய்யன்பர்களது துணையோடு சித்தாந்த சபை நடைபெற்று வருகிறது.
கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்கர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற சித்தாந்த பண்டித பூசணம் பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள் சபையின் சிறப்புப் பேராசிரியராக வீற்றிருந்து சைவ சித்தாந்த சாத்திரங்கள் புராணங்கள் திருமுறைகள் முதலிய சைவ சமய ஞான நூல்களைத் தேர்ந்து பாடம் நடத்தி சித்தாந்த சைவத்திற்கு மக்களை ஆற்றுபடுத்தி வருகிறார்.
ஆங்கில மாதத்தின் ஒவ்வொரு மூன்றாம் ஞாயிறு அன்று சிவஞான நூல்களை பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி ஐயா அவர்கள் பாடம் நடத்தி வருகிறார்.
ஆங்கில மாதத்தின் ஒவ்வொரு மூன்றாம் ஞாயிறு அன்று சிவஞான நூல்களை பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி ஐயா அவர்கள் பாடம் நடத்தி வருகிறார்.
ஐந்து ஞாயிற்றுக்கிழமை வரும் ஆங்கில மாதங்களில் ஐந்தாம் ஞாயின்று சிறப்புச் சொற்பொழிவுகளும் நூல் வெளியீடும் நடைபெற்று வருகின்றன. இதுவரை சபையின் சார்பில் 17 நூல்கள் வெளியிடப் பெற்றுள்ளன.
2014 மே மாதம் சபை முதல் முயற்சியாக “வேனிற் கால சைவ சித்தாந்த வகுப்பு” நடத்தியது. இப்பயிற்சி வகுப்பில் தமிழகம் எங்குமிருந்து 60 சிவ மெய்யன்பர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு நிறைவு நாள் அன்று திருவாவடுதுறை குருமகா சந்நிதானம் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அருளாசி வழங்கினார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.