Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Sunday, 22 June 2014

புடைநூலும் (சிவப்பிரகாசம்) பன்னிரு சூத்திரங்களும்



புடைநூலும் 
(சிவப்பிரகாசம்)
பன்னிரு சூத்திரங்களும்


நூல் குறிப்பு :-


     நூலாசிரியர்         :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  156 +24

     விலை                    : ரூபாய் 60/- (Rs. Sixty only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.



          புடைநூல் என இந்நூலில் குறிக்கப்படுவது மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றான, உமாபதி சிவம் அவர்களால் அருளப் பெற்ற தவப்பிரகாசர்கள் போற்றும் சிவப்பிரகாசம் ஆகும். பன்னிரு சூத்திரங்கள் என்று குறிக்கப் பெறுவது சிவஞானபோதம் ஆகும். மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் முதனூல் என்றும் அவர் மாணாக்கராகிய அருள்நந்தி சிவம் அருளிய சிவஞானசித்தியார் வழிநூல் என்றும் அவருடைய சந்தானத்தில் வந்த உமாபதிசிவனார் அருளிய சிவப்பிரகாசம் சார்பு அல்லது புடைநூல் என்றும் அழைக்கும் மரபு ஆதீன சம்பிரதாயங்களில் வழங்கி வருகின்றன. இச்சம்பிரதாயம் பற்றிய ஆய்வும், சிவப்பிரகாசம் நூல் அமைப்பு பற்றிய ஆய்வும் இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


புடைநூலும் பன்னிரு சூத்திரங்களும் என்னும் இந்நூல்
  1. நூல் வகைகளுள் புடைநூல் என்றொருவகை உண்டா ?
  2. அதற்குக் கூறும் இலக்கணம் வரையறையானதா?
  3. மெய்கண்ட நூல்களுள் சிவப்பிரகாசம் புடைநூலா ?
  4. அது சிவஞானபோதம், சிவஞானசித்தியார் போன்று சித்தாந்த சைவத்தத்துவ ஞானத்தைப் பன்னிரு சூத்திரமாகப் பாகுபாடு செய்து உணர்த்துகின்றதா?
  5. பலகலையும் என்னும் பாடலின் வடிவம் யாது?
என்பவற்றை ஆராய்கின்றது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.