உலகுடைய நாயனார் கழிநெடில்
(மூலமும் உரையும்)
நூல் குறிப்பு :-
உரையாசிரியர் : பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்
பக்கங்கள் : 143 +15
விலை : ரூபாய் 50/- (Rs. Fifty only)
வெளியீடு : சைவ சித்தாந்த சபை,
9-பி, முத்துசாமி சந்து,
இரண்டாவது தளம்,
ஈரோடு 638 001,
தமிழ் நாடு,
இந்தியா.
உலகுடை நாயனார் பிறப்பினால் வைணவ அந்தணர். இவர் சித்தாந்த சைவத்தின் மேன்மையினை உணர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்து மூன்றாவது குருமகா சந்நிதானங்களாகிய சீலத்திரு அம்பலவாண தேசிகரிடம் உபதேசம் பெற்றுச் சிறந்த சைவராக விளங்கினார். திருவாவடுதுறை ஆதீனத்து அடியவர் கூட்டத்துள் ஒருவராயினார்.
நூல் சிறப்பு :-
தமக்கு உபதேசம் அருளிய தேசிகர் மேல் தோத்திர வடிவமாக ஒருநூல் அருளினார். அந்நூல் அவர் பெயராலேயே உலகுடை நாயனார் கழிநெடில் என வழங்குவதாயிற்று. அந்நூலில் சாத்திர நுட்பங்கள் செறிந்து விளங்குகின்றது. மாதவச்சிவஞான முனிவர் அந்நூலைப் பிரமாண நூல்களில் ஒன்றாகக் கொண்டு தமது மாபாடியத்தில் மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளார். அங்ஙனம் பயன்படுத்திய இடம் சிவஞானபோதம் சூத்திரம் 4 அதிகரணம் 3.
இந்நூலில் தத்துவ கமலாசனம், ஞானபாதம், தசகாரியம், அவத்தைகள், ஐந்தொழில் திருக்கூத்து, பசு புண்ணியம், இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம், உயிர்சிவத்துடன் ஒன்றுதல், ஆணவ மல இயல்பு, திரோதான சத்தியின் இயல்பு முதலிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.