Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Sunday, 22 June 2014

அசபா நடனப் பதிகம்



தருமை 
ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 
அருளிய

 அசபா நடனப் பதிகம்


நூல் குறிப்பு :-


     உரையாசிரியர்    :  பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்

     பக்கங்கள்              :  170 +22

     விலை                    : ரூபாய் 80/- (Rs. Eighty only)

     வெளியீடு             சைவ சித்தாந்த சபை, 
                                          9-பி, முத்துசாமி சந்து,
                                         இரண்டாவது தளம்,
                                         ஈரோடு 638 001,
                                         தமிழ் நாடு,
                                         இந்தியா.


நூற்பெயர் விளக்கம் :-

          அசபாநடனம் எனப்படும் நடனத்தை ஆடும் திருவாரூர்த் தியாககேசப் பெருமானைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்ற பத்துப் பாடல்களைக் கொண்ட நூல் என்பது பொருள். 
      அசபை - இது ஒரு மந்திரத்தின் பெயர். செபிக்கப்படாதது என்னும் பொருளை உடையது.  நடனம் - ஈசன் ஆடும் நடனம். இங்குத் திருவாரூர்த் தியாகராசப் பெருமானைக் குறித்தது. தில்லை நடராசப் பெருமானைக் குறித்தன்று. பதிகம் - பத்துப் பாடல்களைக் கொண்ட நூல். இது சிறு பிரபந்த வகையைச் சார்ந்தது.

நூலாசிரியர் :-
      
               இந்நூலினை அருளியவர் தருமையாதீனத்துப் பத்தாவது குருமகா சந்நிதானம் சீர் சிவஞான தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு. இவர் பல பதிகங்கள் அருளியுள்ளார். அவை  “திருவருட்பாத் திரட்டு” எனத் தொகுத்து வெளியிடப்பெற்றுள்ளன. 






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.