கொற்றவன்குடி உமாபதிசிவம்
அருளிய
வினா வெண்பா
(மூலமும் உரையும்)
நூல் குறிப்பு :-
நூலாசிரியர் : பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்
பக்கங்கள் : 222 + 30 =252
விலை : ரூபாய் 120/- (Rs. One twenty only)
வெளியீடு : சைவ சித்தாந்த சபை,
9-பி, முத்துசாமி சந்து,
இரண்டாவது தளம்,
ஈரோடு 638 001,
தமிழ் நாடு,
இந்தியா.
நூற்பெயர் விளக்கம் :-
இந்தியா.
நூற்பெயர் விளக்கம் :-
வினாவெண்பா என்னும் இந்நூல் மெய்கண்டசாத்திரத் தொகுப்பில் ஒன்பதாவது நூலாகத் திருவருட்பயனை அடுத்து அமைந்துள்ளது. உமாபதிசிவம் அருளிய எட்டு நூல்களில் மூன்றாவது நூலாகச் சிவப்பிரகாசம், திருவருட்பயன் என்பவற்றை அடுத்து இந்நூல் அமைந்துள்ளது. சிவப்பிரகாசம் என்னும் நூல் சைவசித்தாந்தத் தத்துவஞானம் முழுவதையும் பொது, உண்மை எனப்பகுத்து விாிவாக 100 திருவிருத்தத்தில் கூறுகிறது. அதனையே திருவருட்பயன் பக்குவமுடைய ஆன்மாவுக்குத் திருவருள் குருவடிவம் கொண்டு முன்நின்று உபதேசித்தல், அதனால் அவ்வான்மா பயன்பெறுதல் ஆகிய வகையில் சுருக்கமாகப் பத்து அதிகாரமாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வோரதிகாரத்துக்கும் பப்பத்துக் குறட்பாக்களாக நூறு குறட்பாக்களில் கூறுகின்றது.
அவ்விரண்டையும் அடுத்துள்ள வினா வெண்பா என்னும் இந்நூல் அங்ஙனம் உபதேசம் பெற்ற மாணாக்கன் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை ஆசாாியாிடத்து வினாவும் முறையில் பதின்மூன்று வெண்பாக்களை எடையதாக அமைந்துள்ளது. வினா வெண்பா என்னும் இப்பெயா் இந்நூலுக்கு நூலாசிாியராலேயே இடப்பட்ட பெயா் என்பதனை இந்நூலின் இறுதிப்பாடலால் அறியலாம்.
சைவ சித்தாந்தாம் பயில்பவா்கள் சிவஞானபோதம், சிவஞானசித்தியாா், திருவருட்பயன், சிவப்பிரகாசம், என்பவற்றை பயின்று அதன்மேல் இருபாஇருபஃது என்னும் நூலினையும் வினாவெண்பா என்னும் இந்நூலினையும் பயிலுதல் வேண்டும்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.