சீர்மிகு தாயுமானார் அருளிய
எந்நாட்கண்ணி - உரை
- முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள்
தெய்வ வணக்கம்
சிவபரம் பொருள்
நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும்
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளே
நீர் - கங்கை
பூத்த - பொலிவுடன் விளங்குகின்ற
வேணி - சடை
நிலவு - பிறை மதியின் ஒளி
எறிப்ப - வீச
மன்று - சிதம்பரத்தில் உள்ள ஞான சபை, மன்றுள் நின்று என்க
ஆடும் - ஆனந்தத் தாண்டவம் செய்யும்
கார் - கருமை, நஞ்சினால் உண்டாகிய கருநிறம்
கண்டன் - கழுத்து உடையவன்
காணுதல் - தன் (ஆன்ம) அறிவில் விளங்கும்படி அறிதல், “பதியை ஞானக் கண்ணினில் சிந்தை நாடுக” - சிவஞான போதம் நூ.9
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.