Natarajar

Natarajar
ஈரோடு சைவ சித்தாந்த சபை தங்களை இனிதே வரவேற்கிறது

Tuesday, 7 October 2014

பிரவாகாநாதி

பிரவாகாநாதி
                                                                                      - முனைவர் ர.வையாபுரி ஐயா அவர்கள்

        ஒருவன் ஓராற்றில் நீரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுடைய பார்வை குறிப்பிட்டதொரு புள்ளியில் நிலைத்திருக்கிறது. அப்புள்ளியில் அவன் பார்க்கும் போது இருந்த நீர் ஓடுகிறது வருகிற நீர் அந்த இடத்தை நிரப்புகிறது. அதனால் அவன் பார்வை நிலைத்திருந்த  புள்ளியில் நீர் நிலையாக இருப்பது போல் தோன்றுகிறது. இங்ஙனம் நிலையாக நிற்பதாகக் கருதுவது பிரவாக நித்தம் எனப்படும். இதனைப் பிரவாக + நித்தம் எனப்பிரித்துக் கூறுதலும் உண்டு. பிரவாகம் போன்ற நித்தம் என்று சொன்னாலும் பிரவாகம் போன்ற அநித்தம் என்று  சொன்னாலும் கருத்து ஒன்றே.

         இந்நீரோட்டத்தைப் போலவே வினை காரணமாகப் பிறப்பு வரும். பிறப்பில் வினையில் விளைவு (இன்பம்,துன்பம்) அனுபவத்துக்கு வரும். அதனை அனுபவிக்க முயற்சி செய்தல் வேண்டும். அனுபவத்தால் அந்த வினை நசிக்கும். அம்முயற்சி மீண்டும் புதிய வினையாக ஏறும். அந்த வினையால் மீண்டும் பிறப்பு வரும்.

          இவ்வாறு வினையும் இடையறாது நீர் பெருக்குப் போல் வந்து கொண்டே இருக்கும். பிறப்பும் நீர்ப் பெருக்குப் போல் வந்து கொண்டே இருக்கும். சுருங்கக் கூறின்,

       சஞ்சிதத்திலிருந்து பிராரத்த அனுபவம். பிராரத்தத்திற்கு முயற்சி. முயற்சியால் ஆகாமியம். ஆகாமியம் சஞ்சிதத்தில் சேரும் என்பதே வினைச் சுழற்சி என்பதாகும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.