உ
சிவமயம்
சுத்தாத்துவித சித்தாந்த சைவம்
- பேராசிரியர் முனைவர் ர. வையாபுரி எம்.ஏ., பிச்.டி.,
இன்று சைவம் என்றும் சைவ சித்தாந்தம் என்றும் வழங்கப்படும் தத்துவ ஞானத்துக்குச் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் எனப்பெயர் வழங்குவர்.
சுத்தாத்துவிதம் என்பது உபநிஷதங்கிலும் சிவாகமங்களிலும் இடம் பெற்றுள்ள அத்துவிதம் என்னும் சொல்லுக்குப் பொருள் கொள்ளுகின்ற முறையை உணர்த்துவது. சுத்தாத்துவிதம் என்பது சித்தாந்த சைவத்தின் உயிர் நாடியான கொள்கை.
அத்துவிதம் என்பது எண்ணுப்பெயர் . துவிதம் - இரண்டு, அத்துவிதம் -ஒன்று
பெரும்பாலோர் அத்துவிதம் என்பதற்கு ஒன்று என்றே பொருள் கொண்டனர். அந்த ஒன்று என்னும் பெயரால் குறிப்பிடப்படுவது பிரம்மம். எனவே பிரம்மப் பொருள் ஒன்று மட்டுமே உள்ளது. அதற்கு இரண்டாவதாக ஒருபொருள் எனக்குறிப்பிடுவதற்கு எப்பொருளும் இல்லை. இருப்பனவாகத் தோன்றும் பொருள்களெல்லாம் வெறும் தோற்றமே. அங்ஙனம் ஒன்றாக இருக்கும் பிரம்மமும் குணங்கள், தொழில்கள் முதலியவற்றால் விசேடிக்கப்படாமல் பொருள் மாத்திரமாக இருந்து கொண்டிருக்கும், இங்ஙனம் விசேடிக்கப்படாமல் தான் மாத்திரமாக - தனி ஒரு பொருள் மட்டுமாக - இருத்தல் கேவலம் எனப்படும். ஆதலின் இவ்விளக்கம் கேவல அத்துவிதம் எனக் கூறப்படும். நிர்விசேஷ அத்துவிதம் என்பதும் இதற்குப் பெயர். நிர் விசேஷம் - விசேஷம் இன்மை. விசேஷம் - அடைமொழியால் சிறப்பித்துக் கூறப்படுதல்.
வேறு சிலர் பிரம்மப் பொருள் ஒன்று மட்டுமே உள்ளது. என்னும் அது தான் குணங்களாலும் தொழில்களாலும் விசேஷத்துக் கூறப்படுவது. அந்தப் பிரம்மப் பொருளும் சித்துப் பொருள்களாகிய ஆன்மாக்களையும் அசித்துப் பொருள்களாகிய பிரபஞ்சத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு அவற்றுக்கு ஆன்மாவாய் - சரீர சரீரி பாவமாய் - உள்ளது. இங்ஙனம் தொழில், குணம், ஆன்மா, பிரபஞ்சம் என்பன உள்ளன எனக்கூறப்பட்டாலும் பிரம்மப் பொருள் ஒன்று மட்டுமெ உள்ளது. அது விஷ்ணு எனக் கூறப்படும். இது விசேஷ அத்வைதம் எனக் கூறப்படும். விசேஷம் - சிறப்பு. இதனை விசிஷ்டம் - விசேஷணத்தால் விசேஷிக்கப்படுவது - எனவும் கூறுவர். இது விசிஷ்டாத்வைதம் எனப்படும்.
சைவ சித்தாந்திகள் ”அத்துவிதம் என்பது ஒன்றா? இரண்டா? என்பதை உணர்த்தும் சொல்லன்று. இரண்டு பொருள்களுக்கிடையே (சிவம், ஆன்மா) உள்ள இயைபினை உணர்த்துவது. சிவமும் ஆன்மாவும் பொருளால் இரண்டாக இருந்தாலும் பெத்தத்திலும் (பாசங்களால் பந்தப்பட்ட நிலை) முத்தியிலும் (பாசங்களிலிருந்து விடுபட்ட நிலை) பிரிப்பின்றி இயைந்தே நிற்கும். ஆதலின் பொருள் ஒன்று எனவும் கூறுதல் இயலாது. இரண்டு எனவும் கூறுதல் இயலாது. ஆதலின் அத்துவிதம் - இரண்டற்ற நிலை - எனக் கூறப்படும் ” என்பர். இங்ஙனம் பொருள் கூறுவதற்கு கேவலம், விசேஷம் முதலிய அடைமொழிகள் தேவையில்லை. அடைமொழிகள் இல்லாமலே - அத்துவிதம் என்ற சொல் - இரண்டற்றது என்றும் பொருளை உணர்த்தும். ஆதலின சுத்தம் - சுத்தாத்துவிதம் - எனப்படும். சுத்தம் என்பது கேவலம், விசஷ்டம என்னும் அடைமொழிகள் இல்லாதது என்னும் பொருளை உடையது. சுத்தம் என்பதும் ஒரு அடைமொழி தானே எனின் இரு முன்னர்க் கூறிய கேவலம், விசிஷ்டம் என்னும் பலவற்றுக்கு வேறானது என வேறுபடுத்திக் காட்டுவதற்காகக் கூறப்படுவது ஆதலின் அந்த வினாவுக்கு இடம் இல்லை.
சிலர் சுத்தாத்துவிதம் என்பதற்கு சுத்தத்தில் அத்துவிதம் (ஒன்று) பெத்தத்தில் துவிதம் (இரண்டு) எனப் பொருள் காண்பர். சைவ சித்தாந்தம் பெத்தத்திலும் சுத்தத்திலும் சிவமும் ஆன்மாவும் பிரிப்பின்றியே இருக்கும் என்னும் கொள்கையுடையது ஆதலின் இவ்விளக்கம் பொருந்துவதன்று.
இங்ஙனம் அத்வைதம் என்பதற்குச் சைவ சித்தாந்தம் இரண்டற்றது எனப் பொருள் கொள்ளுதலின் இது சுத்தாத்துவித சைவம் எனப்படும்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.