பேரூர் வேலப்பதேசிகர்
அருளிய
பஞ்சாக்கரப் பஃறொடை
அருளிய
பஞ்சாக்கரப் பஃறொடை
நூல் குறிப்பு :-
உரையாசிரியர் : பேராசிரியர் முனைவர் ர.வையாபுரி எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள்
பக்கங்கள் : 34 + 254= 288
விலை : ரூபாய் 120/- (Rs. One twenty only)
வெளியீடு : சைவ சித்தாந்த சபை,
9-பி, முத்துசாமி சந்து,
இரண்டாவது தளம்,
ஈரோடு 638 001,
தமிழ் நாடு,
இந்தியா.
முன்னுரை:-
முன்னுரை:-
பஞ்சாக்கரப் பஃறொடை
என்னும் இந்நூல் சீலத்திரு பேரூா் வேலப்ப தேசிகா் என்னும் ஆசாரியமூா்த்திகளால் அருளப்பட்டது.
பஞ்சாக்கரம் - திருவைந்தெழுத்து. பஃறொடை – வெண்பாவின் வகைகளுள் ஒன்று. பல தொடைகளான்
இயன்ற நெடும்பாட்டு.
இந்நூல் நாற்பத்திரண்டு
கண்ணிகளை உடையதாக – 84- வரிகளில் இயற்றப்பட்டுள்ளது.
வேலப்பதேசிகர்
இந்நூலில் திருவைந்தெழுத்தை அடிப்படையாக வைத்துப் பொதுவாகச் சைவ சித்தாந்தத்தையும்
சிறப்பாக நின்மல அவத்தை, தசகாரியங்கள் என்பவற்றையும் விளக்கியிருக்கின்றார். இந்நூலின்
பொருள், வேலப்பதேசிகர் தமது ஆசாரிய மூர்த்திகளாகிய திருவாவடுதுறை ஆதீனத்துக் குருமகா
சந்நிதானங்களினிடத்து (பத்தாவது பட்டம்) உபதேச முறையில் பெற்றாதாகும்.
இந்நூல் திருவாவடுதுறை
ஆதீனத்துப் பண்டார சாத்திரங்கள் பதினான்கனுள் இடம் பெற்ற சிறப்புடையது. தசகாரியம் பற்றிக்கூறும்
வேறு மூன்று நூல்கள் பண்டார சாத்திரத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. எனினும் தசாகாரியத்தை
விளக்கிக் கட்டுரை எழுதும் அறிஞர்கள் இந்நூலை ஆதாரமாகக் கொண்டே எழுதுகின்றனர். இது
கொண்டு இந்நூலின் சிறப்பு எத்தைகையது என்பதை உணா்ந்து கொள்ளலாம்.
முனைவா் ர.வையாபுாரி
அவர்களின் உரையைத் தழுவி ஆங்கிலத்தில் விளக்கம் எழுதியுள்ளார் நம் ஆதினத்தில் ”சித்தாந்தச்
செம்மணி” என்னும் விருதினை வழுங்கிக் கவுரவிக்கப்பட்ட முனைவர்.
கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.